வயோதிப பெண் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு!

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ராமசாமி ராமயி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

குறித்த மூதாட்டி பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த நிலையில் வெட்டு காயங்களுடன் சடலமாக இருப்பதை அவதானித்த கிராமத்தவர்களால் நேற்று (22) மாலை மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இன்று (23) காலை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மூதாட்டியிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை களவாடுவதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply