பொலிஸ் பொறுப்பதிகாரி மீது மோதிய வேன்!

களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா மீது வேன் ஒன்று மோதியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு (22) இடம்பெற்றுள்ளது.

வஸ்கடுவ – வாடியமன்கட பகுதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், பாணந்துறை திசையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த வேன் இவ்வாறு மோதியதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த பொலிஸ் பொறுப்பதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

வேன் பொலிஸாரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளதுடன், சாரதி கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply