“நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் யாழ். செம்மணியில் முன்னெடுப்பு!

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணி பகுதியில் “நீதியின் ஓலம்” கையொப்பப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10.00 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாயகச் செயலணி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம், கிருசாந்தி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய செம்மணி பகுதியில் அணையா விளக்கு போராட்ட தூபி அமைந்துள்ள இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து மௌன வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது வடக்கின் ஏற்பாடுக்குழு இணைபாளர் ஜெயசித்திரா போராட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து கையெழுத்து பெறும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தமிழர் தாயகமெங்கும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

குறித்த போராட்டம்,

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளுக்கும் முழுமையான சர்வதேச நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply