அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்கள் ஒரு மாதத்துக்கு மூடப்படவுள்ளதாக சிங்கபூர் பிரதமர் லீ ஹ்சீன் லூங் அறிவித்துள்ளார்.
அடுத்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் இந்த லொக்டவுண் அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“COVID-19 ஆரம்பமானது முதல், நாங்கள் நெருக்கடிக்கு அமைதியாகவும் முறையாகவும் பதிலளித்துள்ளோம், முன்னரே திட்டமிட்டு, நிலைமை மாறும்போது எங்கள் நடவடிக்கைகளை சரிசெய்கிறோம்” என்று லீ ஹ்சியன் லூங் தெரிவித்தார்.
அனைத்து அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதாரத் துறைகளைத் தவிர பெரும்பாலான பணியிடங்களை நாங்கள் மூடுவோம். உணவு நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், மருத்துவமனை, போக்குவரத்து மற்றும் முக்கிய வங்கி சேவைகள் திறந்த நிலையில் இருக்கும், ”என்று அவர் மேலும் கூறினார்.
நாடு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், எதிர்கால COVID-19 சூழ்நிலையை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.