ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை மீறி செயற்படுவோரை கைது செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறை படுத்தவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.