இலங்கையின் பிரபல பாடகர் டோனி ஹசன் தனது 73 ஆவது வயதில் காலமானார்.
இவர் ஐந்து தசாப்தங்களாக ஹிந்திப் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்தார். இவரது குரலில் உருவான பல சிங்களப்பாடல்களும் இன்றுவரை மக்களின் விருப்புக்குரியவையாக உள்ளன. புகழ்பூத்த பாடகியான சுஜாதா அத்தநாயக்கவுடன் இவர் இணைந்து பாடிய பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவையாக இருந்தன.
ஹசனின் பூதவுடல் இன்று (மே 17) மாலை 6 மணி வரை மாளிகாவத்தை மல்லிகாராம வீதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், மாலை 6.15 க்கு மாளிகாவத்தை முஸ்லிம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் பாடகி கீர்த்தி பாஸ்குவேல் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
T04