அமெரிக்க அதிபர் பைடனின் திடீர் முடிவால் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு இரத்து

ஆஸ்திரேலியாவில் வரும் வாரம் நடைபெறவிருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு திடீரென இரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வரும் வாரம் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறவிருந்தது. இந்த நிலையில் அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகின்றமையால், ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூகினியா பயணத்தை ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்த நிலையில் நியூ சவுத் வேல்ஸ் நகரில் செய்தியாளார்களைச் சந்தித்த ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ், அடுத்த வாரம் சிட்னியில் குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு நடைபெறாது. அது இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஜப்பானில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் சந்திக்கவுள்ளோம். ஜப்பானில் குவாட் தலைவர்களிடையே விவாதத்தை நடத்துவோம், எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply