சட்ட விரோதமான அனுமதியற்ற மருந்து வகைகள் நாடு முழுவதும் தொடர்ந்தும் பாவனையில் உள்ளதாக மருத்துவம் மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் விநியோகஸ்தர்களை பதிவு செய்யும் முறை செயல்படாததால், நாடு முழுவதுமுள்ள அரச மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்தகங்களில் பதிவு செய்யப்படாத மருந்துகள் புழக்கத்தில் உள்ளதாக மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் ஜி.ஜி.சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மீண்டும் தரம் குறைந்த மருந்துகளின் பயன்பாடு அல்லது மருந்துகள் தொடர்பான மோசடிகள் தீவிரமாக அதிகரித்து வருவதாக மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையை கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் பதிவு செய்யப்பட்ட மற்றும் தரம் கூடிய மருந்துகளின் பாவனையை மேம்படுத்துவதற்கு மருந்துகளை வழங்கும் விநியோகஸ்தர்களை பதிவு செய்யும் பொறிமுறையானது வினைத்திறனுள்ளதாக்கப்பட வேண்டுமெனவும் மருத்துவர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.