தபால் மூல வாக்காளர்களின் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படவேண்டும் என அறிவிப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்காளர்களின்  பெயர்ப்பட்டியலைக்  காட்சிப்படுத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரே மாதிரியான பெயர்கள் இருப்பின் தமது தகவல்களை வேறு ஒருவர் ஊடாகச் சரிபார்த்து, அதன்பின்னர் தபால் வாக்களிப்பு விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதைத் தவிர்க்குமாறு தபால் மூல வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை வாக்காளர் பெயர்ப்பட்டியல் காட்சிப் படுத்தப்பட்டுள்ள இடங்களிலும் மாவட்ட தேர்தல் காரியாலயங்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களைப் பெற முடியும் என்பதுடன், தபால் மூல வாக்களிப்புக்கு தகுதியான அனைவரும் விண்ணப்பங்களை ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பிவைக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply