சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி ரணில்!

நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஆரம்பம் முதல் தம்முடன் இணைந்து பயணித்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாடு நெருக்கடியில் இருந்தபோதும் எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் போராடும்போதும் என் மீதும் எனது திட்டத்தின் மீதும் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தீர்கள்.

சவால்களைச் சமாளிக்க முடியாததாகத் தோன்றிய சந்தர்ப்பத்தில் உங்களது அர்ப்பணிப்புக்கள் அளப்பரியன. இப்போது எங்களுடன் இணைந்திருப்பவர்களை வரவேற்கின்றோம்.

நேர்மறையான சிந்தனைகளைப் பகுத்தறிந்து கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக இணைவதன் முக்கியத்துவத்தை நீங்கள் தற்போது புரிந்துள்ளீர்கள்.

ஒன்றாக இணைவதால், நாம் இன்னும் சாதிக்க முடியும்.

அதேநேரம் செழிப்பான, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எமது பணி தொடரும் என்பதை உறுதிப்படுத்துவதுடன், அதனை நனவாக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்.

இந்தப் பயணம் எளிதானதல்ல. ஆனால், ஒன்றாக இணைவதன் மூலம் நிலைபேற்றை அடையலாம்.

அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிர்பார்ப்புடனான இலங்கையை உருவாக்குவோம்” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply