(சர்ஜுன் லாபீர்)
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு உளநல உதவி நிலையத்தின் அனுசரனையில் நேற்று (14) இடம்பெற்றது.
செந்நெல் கிராமம்-01, மலையடிக்கிராமம்-01,தமிழ் பிரிவு-04 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் சிறுவர் உரிமைகள் பாதுகாக்கும் வேலைத்திட்டங்களின் ஒரு அம்சமாக சிறுவர் உரிமைகள் சார்ந்த விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பாதாகைகள் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(எல்.எல்.பி) பிரதம அதிதியாக கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் பதித்த பாதாகைகளை திரை நீக்கம் செய்து வைத்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக மட்டக்களப்பு உளநல உதவி நிலையத்தின் இயக்குனர் அருட்தந்தை ஜீவராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மேலும் இந் நிகழ்வுக்கு உளநல உதவி நிலையத்தின் அம்பாறை திட்ட இணைப்பாளர் எம்.நிசாம்,திட்ட உதவியாளர் எஸ்.தர்சிகா,பிரதேச செயலக சமூக சேவை பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி ஏ.யூ.பசீல், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம் ஹரீமா, ஏ.ஜே.குறைசா, கிராம சேவகர்களான ஐ.எல்.எம்.ஒஜீஸ்கான், ஏ.எம் சித்தி பஸ்ரியா எம்.ஜலால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேவேளை சிறுவர் உரிமைகள் மேம்பாடு சம்மந்தமான சிறுவர்களின் கலாச்சார நிகழ்வும் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.