வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவின் முதல் நாளான இன்று காலையில் இருந்து அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன.
காலை வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், துர்க்கை அம்மன், முருகப்பெருமான் ஆகியோருக்கு விசேட பூசைகள் நடைபெற்று, வசந்த மண்டபத்தில் இருந்து மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு எழுந்தருளி பக்தர்களின் அரோகரா கோசத்துடன் துர்க்கை அம்மன் கொடியேற்றம் நடைபெற்றது.
இன்றிலிருந்து 12 தினங்கள் துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம் இடம்பெறவுள்ளது. வரும் 13 ஆம் திகதி சப்பரமும், மறுநாள் 14 ஆம் திகதி சனிக்கிழமை தேர் உற்சவமும் நடைபெறவுள்ளன.