இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேபாளத்தின் காத்மண்டு நகரைச் சென்னறைந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று நண்பகல் இலங்கையிலிருந்து புறப்பட்ட கோட்டபாய ராஜபக்ஷ ஶ்ரீலங்கன் விமானம் மூலமாக திரிபுவன் விமான நிலையத்தைச் சென்றடைந்தார் என விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சௌவத்ரி குழுமத்துடன் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக நம்பப்படுவதாகவும், அவரை நேபாளத்துக்கு சௌவத்ரி குழுமமே அழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாம்சிகேலில் உள்ள ஹோட்டல் விவாண்டாவில் நேற்றுத் தங்கியிருந்த கோட்டபாய ராஜபக்ஷ நேபாளத்திலுள்ள பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரக வட்டாரங்களில் இருந்து அறியக்கிடைத்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் அவருக்கெதிராக “கோட்ட கோ ஹோம்” அரகலய மக்கள் எழுச்சியை அடுத்தும் நாட்டை விட்டு வெளியேறியிருந்தமை நினைவுகூரத்தக்கது.