கல்விச் சீர்திருத்தம், டிஜிட்டல் மாற்றம் தொடர்பில் ஆராய்வு
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா, பிரதமருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இதன்போது, இலங்கையில் கல்விச் சீர்திருத்தம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் மூலம் பொதுத்துறையை நவீனமயமாக்குவதில் ஐக்கிய நாடுகளின் கவனம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் நிலையான அபிவிருத்திக்காக இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், சமூகப் பாதுகாப்பு, கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் ஊடாக பொதுத்துறையை நவீனமயப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இச்சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியுமான அசுசா குபோட்டா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் டிஜிட்டல் மற்றும் புத்தாக்கக் குழுவின் தலைவர் ஃபாடில் பாக்கிர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐ.நா மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.