சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் தூதுக்குழுவினர் இன்று (18) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போது, பிரஜைகள் எதிர்நோக்கும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையை பேணுமாறு ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தை வலியுறுத்தியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வெற்றியானது நிர்வாகத்தின் மீதான பொது நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
குழந்தை வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கையாளுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் கடுமையான சீர்திருத்தங்களுடன் ஊழலுக்கு எதிராகப் போராடுதல் ஆகியவற்றில் இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.