புதிய ஜனநாயக முன்னணியின் இரண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஒன்றிற்கு ரவி கருணாநாயக்கவை நியமித்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துவதற்கு புதிய ஜனநாயக முன்னணி தீர்மானித்துள்ளது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (20) நடைபெற்ற கூட்டத்தின் போது, இதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு;
1. சட்டத்தரணி குமார் துனுசிங்க
2. சட்டத்தரணி இந்திக்க வேரகொட
3. கலாநிதி விதானகே
4. சட்டத்தரணி யசஸ் டி சில்வா – குழு செயலாளர்
மேற்படி ஆய்வுக் குழுவின் அறிக்கையை 3 வாரங்களுக்குள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அறிக்கையை வழங்க தீர்மானிக்கப்பட்டது.