மலையகத்துக்கான ரயில் சேவைகளில் மண்மேடுகள் அகற்றும் பணி தொடர்கிறது!

கடும் மழை காரணமாக ஹாலி-எல உடுவர பகுதியில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த மண் மேடுகள் மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இதன்படி, பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான புகையிரத சேவைகள் மேலும் சில நாட்களுக்கு இடைநிறுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், பசறை 16வது மைல் பகுதியில் மண்சரிவு காரணமாக முற்றாக தடைப்பட்டிருந்த பசறை – லுணுகல வீதியின் ஒரு பாதை காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து தெதுரு ஓயா, பேர் ஆறு, உல்ஹிட்டிய-ரத்கிந்த, பொல்கொல்ல, நச்சதுவ, ராஜாங்கனை, கலா வெவ மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பல நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதி, இலகுரக வாகனங்களுக்காக நேற்று (29) பிற்பகல் திறந்து விடப்பட்டது.

எனினும் ஆனமடுவ மற்றும் புத்தளத்தில் சுமார் 20 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply