வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரசன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கெப் வாகனத்தில் வந்த சிலரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் 45 வயதான நபரொருவரே குறித்த சமபவத்தில் உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 18 வயதான இளைஞர், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கெப் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா குமன்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓமந்தை பொலிஸார் குறிப்பிட்டனர்.