எதிர்வரும் 9, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை விளக்கினார்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே மீண்டும் ஒரு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் குறித்து அறிவிக்கும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து மக்கள் கவனம் செலுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
“தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகே மீண்டும் ஒரு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த குழப்பநிலை, இது புயலா அல்லது காற்றழுத்த தாழ்வா என்பதை எம்மால் உடனடியாக சொல்ல முடியாது.
இதில் தற்போது வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது வங்காள விரிகுடா பகுதியில் இருந்து வடக்கு நோக்கி நகர்வதைக் குறிக்கிறது.
ஆனால் வடமேற்கே கனமானது. முன்னைய அமைப்புடன் ஒப்பிடும் போது இந்த அமைப்பு கிழக்குக் கடற்கரையிலிருந்து மேலும் விலகிச் செல்வதைக் காணலாம்.
9, 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இதன் மறைமுக தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, மறைமுக தாக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் சாதாரண மழை நிலை 09 ஆம் திகதி இரவின் பின்னர் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகுமா இல்லையா என்பதை எதிர்கால முன்னறிவிப்பில் மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்துவோம்” என தெரிவித்தார்.