புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் சீருடைகளை வழங்க பணிப்புரை!

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்காக 11,817 மில்லியன் மீற்றர் துணி தேவைப்படுகின்றது.

அடுத்த வருடத்தில் 46,40,086 மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட வேண்டும்.

2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான  முழுத் தொகை துணியையும் அன்பளிப்பாக வழங்க சீன மக்கள் குடியரசு முன்வந்துள்ளது.

குறித்த சீருடை துணிகள் 3 தொகுதிகளாக இலங்கையை வந்தடையவுள்ளதுடன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தொகுதிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply