மெல்சிறிபுர தித்தெனிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 29 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை வீதி, மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாழடைந்த இடம்மொன்றுக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தை பெறுவதற்காக இழுக்கப்பட்ட கம்பியில் மோதி இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.