நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்டம் 1 இன் கீழ், குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (16) மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை எல்ல, ஹாலிஎல மற்றும் பசறை, கண்டி மாவட்டத்தின் மெததும்பர மற்றும் பாததும்பர,  குருநாகல் மாவட்டத்தில் ரிதீகம, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை, அம்பன்கங்க கோரலய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply