தலாவ பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றவர் கைது!

பொலிஸ் தடுப்பு காவலில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம், தலாவ கம்பிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர், கடந்த 12ஆம் திகதி வீடு புகுந்து சொத்துக்களை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தலாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட வேளையில் பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply