நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரயில்வே நிலைய வீதி – நுகேகொட பகுதியில் 05 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த மஹரகம பகுதியை சேர்ந்த 71 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துடுகெமுனு மாவத்தை மற்றும் திப்பிட்டிகொட பகுதியில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 11 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் 300 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 31 மற்றும் 32 வயதுடைய பேலியகொட மற்றும் களனி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
அத்தோடு, கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுகம்பலை சந்தியில் 11 கிராம் 300 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த கொலொன்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ,குறித்த சம்பங்களுடன் தொடர்புடைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.