அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து! மூவர் பலி!

அட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து  ஒன்று இன்று சனிக்கிழமை (21) விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

அட்டனிலிருந்து பயணித்த குறித்த பேருந்து  அட்டன் மல்லியப்பு வாடி வீட்டுக்கருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து  விபத்துக்குள்ளானது.

பேருந்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுதுள்ளது.

பேருந்தின  சாரதி , நடத்துனர் உட்பட பயணிகள் பலர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply