இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று கடுகன்னாவ, டாசன் டவர் அருகில் வீதியில் இருந்து கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த 5 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
தெல்தெனிய இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு சொந்தமான பேருந்து கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த போது வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி கவிழ்ந்துள்ளது.
சம்பவத்தின் போது காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் பிரேக் செயலிழந்தமையினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.