பாதுகாப்பு வேலி உடைந்து கீழே விழுந்த சிறுவன் படுகாயம்!

பதுளை நகரத்தின் மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியின் பாதுகாப்பு வேலி உடைந்தமையால் சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே தவறி வீழ்ந்த   சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை – பசறை வீதியில் 2 ஆவது மைல்கல் பகுதியைச் சேர்ந்த  சிறுவனே காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சிறுவன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் தனது தாயுடன் பதுளை நகரத்திற்கு சென்றுள்ள நிலையில் மத்திய வர்த்தக நிலையத்தின் இரண்டாவது மாடியில் உள்ள இரும்பு பாதுகாப்பு வேலியில் சாய்ந்துகொண்டிருந்த போது பாதுகாப்பு வேலியானது திடீரென உடைந்து மாணவனுடன் கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply