வரலாற்று சாதனை படைக்க நாசா முயற்சி!

சூரியனுக்கு மிக அருகில் சென்று வராலாற்று சாதனை படைக்க நாசா விண்கலம் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில்    நாசாவின்  பார்க்கர் சோலார் ப்ரோப் எனப்படும் விண்கலம் ஒன்று கடும் வெப்பநிலை மற்றும் தீவிர கதிர்வீச்சை தாங்கி சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை நெருங்கியுள்ளது.

இந்த அனல் பறக்கும் வெப்பத்தில் பறக்கும் விண்கலத்தில் இருந்த பல நாட்கள் தொடர்பு எதுவும் இல்லாமல் இருப்பதால் அது செயற்படுகிறதா இல்லையா என்பதை அறிய 27 ஆம் திகதி வரை விஞ்ஞானிகள் காத்து இருக்கின்றார்கள்.

சூரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

நாசாவின் தலைமை விஞ்ஞானி நிக்கோலா பாக்ஸ் பிபிசி செய்தியிடம் கூறினார்: “பல நூற்றாண்டுகளாக, மக்கள் சூரியனைப் பற்றி அறிந்திருக்கின்றார்கள். ஆனால் நீங்கள் உண்மையில் அதைப் பார்வையிடும் வரை அந்த இடத்தின் வளிமண்டலத்தை நீங்கள் அனுபவிப்பதில்லை. அதனூடாக செல்லும் வரை சூரியனின் வளிமண்டலத்தை உண்மையில் அனுபவிக்க முடியாது.”

பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டம்  2018 இல் தொடங்கப்பட்ட  தற்போது சூரிய குடும்பத்தின் மையத்தை நோக்கி செல்கிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply