மாத்தறை தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் நேற்று (23) இரவு இடம்பெற்ற மோதலில் பாடசாலை மாணவர் உட்பட நால்வர் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தியில் மாணவி ஒருவரிடம் நபரொருவர் பேசிக் கொண்டிருந்த போது, ​​அதனை கண்டு கோபமடைந்த அவரது உறவினர் உள்ளிட்ட சிலர் வந்து இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் 15 வயது பாடசாலை மாணவர், 20 வயதுடைய அவரது சகோதரி, 30 வயதுடைய செவித்திறன் குறைபாடுள்ள நபர் ஒருவர் மற்றும் 33 வயதுடைய நபர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு வந்த ஒருவர் 20 வயதுடைய யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இது தொடர்பில் மாலிம்பட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

அதனையடுத்து, சம்பவம் தொடர்பில் மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பந்துல வீரசிங்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply