பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மேலும் மோசமடைந்து வருகிறது! ஐக்கிய நாடுகள் சபை!

உலகின் பணக்கார நாடுகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை குறைத்து வருவதன் காரணமாக, பஞ்சம் மோசமடைந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் உலகில் 307 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படும் என்றும், அவர்களில் 60 சதவீதத்தினர் மட்டுமே உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டில் உலகில் 117 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்காது என ஐக்கிய நாடுகள் சபை  எச்சரித்துள்ளது.

இந்த வருடமும் உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க 49.6 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை என்று மதிப்பிட்டிருந்தது, ஆனால் அதில் 46 சதவீதத்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்ததாக தெரியவருகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply