நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹவிலச்சிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேமடுவ பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபர் 26 வயதுடைய பேமடுவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் மஹவிலச்சிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேகம பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தம்புள்ளை பல்லேகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.