உக்ரைன் வலுசக்தி உட்கட்டமைப்பை இலக்கு வைத்து ரஸ்யா தாக்குதல்!

உக்ரைன் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ரஸ்யா உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

ரஸ்யா உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து பாரிய  வலுசக்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

கார்கிவ் நகரத்தின் மீது கடும் தாக்குதல் இடம்பெறுவதாக அதன் மேயர் தெரிவித்துள்ளார்.

டிரோன் தாக்குதல்கள் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் மெட்ரோ புகையிரத நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

தலைநகர் உட்பட பல பகுதிகளில் வலுச்சக்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிறிஸ்மஸ் தினத்தன்று அதிகாலையில் ரஷ்யா உக்ரைனை இருளில் மூழ்கடிக்க முயற்சிக்கின்றது என பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply