நுவரெலியா ஹவஎலிய பகுதியில் மதனமோதக போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கஞ்சா கலவை செய்யப்பட்ட 300 மதனமோதக போதை மாத்திரைகள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அனுமதிப்பத்திரமும் இன்றி சட்டவிரோதமாக நடத்தி வந்த ஆயுர்வேத மருந்தக விற்பனை நிலையம் ஒன்றிலே இந்த மதனமோதக போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணையின் பின்னர் சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.