ஹபரணை பகுதியில் தீப்பற்றி எரிந்த டபுள் கெப் ஒன்றினுள் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹபரணை மின்னேரிய வீதியில் 13வது மைல் பகுதியில் வாகனம் நேற்று (25) இரவு தீப்பிடித்துள்ளதுடன், பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் போது, கெப் வண்டியின் உள்ளே சடலம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சடலம் பின் இருக்கையில் காணப்பட்ட நிலையில் உயிரிழந்தவர் வாகனத்தின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படுகிறது.
வாகனத்தின் உரிமையாளர் தெகட்டானை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.