கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு பணிகளுக்காக இலங்கைக்கு 128.6 மில்லியன் டொலர்களை உலக வங்கி ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகெங்கிலும் வளரும் நாடுகளுக்கான முதல் அவசர உதவி நடவடிக்கைகளுக்கு உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு இந்நத ஒப்புதலை அளித்துள்ளது.
முதல் குழு திட்டங்கள், 1.9 பில்லியன் டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் 25 நாடுகளுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதை விரைவான செயல்பாட்டாக பயன்படுத்தி 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி, முன்னேறி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அவசர நிதி உதவியின் மிகப்பெரிய பகுதி இந்தியாவுக்கு சென்றுள்ளது. அதாவது 1 பில்லியன் அமெரிக்க டொலர், கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் இந்தியாவிற்கு தடுப்பு பணிகளுக்காக நிதியுதவியாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது, சிறந்த திரையிடல்(கண்டறிதல்), தொடர்பு தடமறிதல், ஆய்வக கண்டறிதல், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது, புதிய தனிமை வார்டுகளை அமைக்க போன்றவற்றிற்கு என்று உலக வங்கி கூறியுள்ளது.
தெற்காசியாவில், உலக வங்கி பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மாலத்தீவுக்கு 7.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.