கொரோனாவால் துவண்டுள்ள அமெரிக்கா தியாகங்களை செய்ய வேண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருக்கம் .

நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

“அமெரிக்காவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம்.

நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 30 நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும அரசு வழிகாட்டலின்படி விதிமுறைகளைக் கடைபிடித்து கொரோனா தொற்றைக் குறைக்க வேண்டும்.

அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம், இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்

நாம் சமூக விலக்கலைக் கடைபிடித்து, அதீதிமான சுத்தத்தை கடைபிடித்து, வீட்டுக்குள்ளே இருப்புதான் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெல்ல முக்கியமான ஆயுதம், அந்த பெரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியும். நாம் அடுத்துவரும் வாரங்களில் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையில் இருங்கள்

மிகச்சிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோருடன் கலந்துபேசி அமெரிக்கா கொரோனா வைரஸுக்கு எதிராகப் பணியாற்றி வருகிறது. கொரோனா வைரஸிலிருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள தேவையான மருத்துவம், சிகிச்சை, தடுப்பு மருந்துகள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தை பெற்று வருகிறோம்

மருத்துவ ரீதியாக நாம் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். உலகில் எந்த நாடும் செய்யாத அளவுக்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகிறோம்.

கொரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்து அதை பரிசோதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதித்துள்ளது.

மக்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற அமெரிக்கா எடுத்து வரும் முக்கியமான முயற்சிகளில் இது மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி பத்து லட்சத்து 15 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று, பலியானவர்களின் எண்ணிக்கையானது ஐம்பதாயிரத்து 3218 பேராக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆராயிரத்து 88 பேர் பலியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Kathiradmin