உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், பலி எண்ணிக்கையும் இரட்டிப்பு வேகத்தில் சென்று கொண்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போதுவரை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் உள்ளனவர்களின் எண்ணிக்கையானது பத்து லட்சத்து, தொன்னூற்று எட்டாயிரத்து ஆறுபேராக உயர்ந்திருக்கிறது,
அதேவேளை, பலியானவர்களின் எண்ணிக்கையானது 59,141 ஆக உயர்ந்திருக்கிறது, எனினும், 228,405 மீட்கப்பட்டுள்ளனர் என்றும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதேவேளை, நேற்றைய தினம் உலக நாடுகளில் பலியானவர்களின் விபரம் வருமாறு,
அமெரிக்கா, 1,321
பிரான்ஸ் 1,120
பிரித்தானியா 684
இத்தாலி 766
ஸ்பெயின் 850
ஜேர்மனி 168
ஈரான் 134
பெல்ஜியம் 132
போன்ற நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது. இதேவேளை, அமெரிக்காவில் மட்டும் 119,827 கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.