கொரோனா பரிசோதனைக்காக சென்ற குழு மீது தாக்குதல்

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளச் சென்ற மருத்துவக்குழுவினர் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார்வூத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்‌ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அய்யனார்வூத்து தனிமைப்படுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று காலையில் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்வதற்காக சென்றவேளை அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர விடாமல் தடுத்து, நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.

திடீரென மருத்துவ குழுவினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் சுகாதார ஆய்வாளர் காளிராஜை தாக்கி சட்டையை கிழித்து செல்போனை பறித்து பைக்கை சேதப்படுத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட தாசில்தார் பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் மருத்துவ குழு உதவியுடன் குடும்ப உறுப்பினர்களை அம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

You May Also Like

About the Author: Kathiradmin