கொரோனா தொற்று : வடக்கு ஆளுநர் செயலகம் விசேட அறிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு பாதுகப்புப் பெற்றுக்கொள்ளவது என்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் பிரகாரம். மக்கள் ஒன்று கூடுவதால் கொரோனா வைரஸ்ஸின் பரம்பல் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டதையடுத்து, தேசிய அளவில் மக்கள் ஒன்றுகூடல்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, திருமண வைபவங்கள், குடும்ப நிகழ்வுகளை நடாத்துவதாயின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிக்கு முன்னறிவித்தல் வழங்கி, அவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

அடுத்துவரும் இருவாரகால பகுதிக்கு ஆலயங்களில் நடைபெறும் அன்னதான வைபவங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் சமய வைபவங்கள் எதனையும் மேற்கொள்ளாது இயன்றவரை தவிர்ப்பதை ஆலயநிர்வாக சபையினர் உறுதிப்படுத்திகொள்ளவேண்டும்.

சுயஒழுக்கத்துடனும் சூழ்நிலைக்கேற்ப ஆரோக்கியமான தற்பாதுகாப்புப் பழக்கவழக்கங்களுடனும், சமூகப்பொறுப்புடைய நடைமுறைகளுடனும் நடந்துகொள்ளவேண்டும் எனவும் வடமாகாண ஆளுநர் செயலகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: Kathiradmin