சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை

“சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை.

இதனால்தான் அன்றைய காலத்தில் அரசால் மீட்பு நடவடிக்கைகளையும் ஏனைய இடர்கால நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சியினர் அப்படியல்லர்.”

– இவ்வாறு தெரிவித்தார் வாசுதேவ நாணயக்கார.

அவர் மேலும் கூறியதாவது:-

“கொரோனா பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அரசியல் இலாபம் தேடிக்கொள்கின்றனர்.

சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கோ இராணுவத்துக்கோ எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை.

அவரவர் தரப்பில் மேற்கொள்ளக்கூடிய இடர்கால நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொண்டனர்.

இதனால் அது நல்ல பயனைத் தந்தது. நெருக்கடி நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் செயற்பட்டதைப் போன்று தற்போதைய எதிர்க்கட்சியினர் செயற்படவில்லை.

இவர்களின் செயற்பாடு சுயநலப் போக்கில்தான் உள்ளது” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir