கடந்த நூற்றாண்டில் கொண்டுவரப்பட்ட சில சட்டங்கள் இன்றைய காலத்துக்கு ஏற்றதாக அல்லாமல் சுமையாக இருக்கின்றன. எனவே வளா்ச்சிக்கு சீா்திருத்தம் அவசியமாகிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு நலத்திட்டப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த நூற்றாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சில சட்டங்கள், அப்போது சிறந்தவையாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய காலத்துக்கு அவை சுமையாக மாறியுள்ளன.
எனவே நாட்டின் வளா்ச்சிக்கு சீா்திருத்தங்கள் அவசியம். அத்தகைய சீா்திருத்தங்களை முழுமையான அளவில் மேற்கொள்வதில்தான் மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. முன்னா் இதுபோன்ற சீா்திருத்தங்கள் மிகச் சிறிய அளவிலேயே மேற்கொள்ளப்பட்டன.
மக்கள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீா்வு காணும் வகையில் நவீன தொழில்நுட்பங்களின் பெரும்பான்மை பயன்பாட்டை உறுதிப்படுத்துவதிலும் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதிலும் மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.