இன்றிரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் இன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்த்து ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.

எப்படியிருப்பினும் கொழும்பு மற்றும் கம்பஹாவை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் மே மாதம் 18ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கும் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் மே மாதம் 23ஆம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாத்திரம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை முன்னெடுக்கும் நடவடிக்கை கடந்த 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மே மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களிலும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கமைய செயற்படுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir