ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க தரப்பிற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள ரவி கருணநாயக்க, தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் முதலில் தங்கள் பிழைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், “தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கே இவ்வாறு செயற்ப்பட்டு வருகின்றோம். எவ்வாறாயினும், தவறான தகவல்களைப் பரப்புபவர்கள், நாங்கள் உண்மையில் என்ன செய்ய முயற்சிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்போது அதில் அரசியல் இலாபம் தேட முற்பட்ட 21 உறுப்பினர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர்களில் பெரும்பாலோர் உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் முடக்க நிலையை தளர்த்துவதன் மூலம் ஏற்பட்ட இரண்டாவது தாக்கத்தினை அனுபவிக்கும் தென் கொரியா மற்றும் சீனாவின் நிலைமையை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ரவி கருணநாயக்க கேட்டுக்கொண்டார்.