வட பகுதி விவசாயிகள் சௌபாக்கியா திட்டத்தினை பயன்படுத் திக்கொள்ள வேண்டும்!

வட பகுதி விவசாயிகள் அரசின் சௌபாக்கியா வேலைத்திட்டத்தினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என யாழ்மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சலாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்துள்ளார் .

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மானிய அடிப்படையிலான உதவிகளை வழங்கி உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கிய திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்கின்ற 16 உப உணவு பயிர்களுக்கும் அரசாங்கத்தினால் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதன் காரணமாக விவசாயிகள் எந்தவித அச்சமுமின்றி சௌபாக்கியா திட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய அடிப்படையிலான உதவிகளைப் பெற்றுக் கொண்டு குறித்த பயிற்செய்கையினை துரிதமாக மேற் கொள்ளுமாறு யாழ்மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் விவசாய உற்பத்தி திறனை அதிகரிக்கும் முகமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த உப பயிர் திட்டத்தில் உப பயிர்களினை பயிரிடுவதன் மூலம் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் முழுமையாக அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாயிகள் அச்சம் அடைய தேவையில்லை, அரசாங்கத்தினால் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதன் காரணமாக விவசாயிகள் குறித்த 16 உப பயிர்களையும் சௌபாக்கியா திட்டத்தை பயன்படுத்தி பயிர்ச்செய்கையினை திறம்படச் செயற்படுத்திக்கொள்ள முடியும்.

ஏனெனில் தற்போது குறித்த உப உணவுப் பொருட்களுக்கான இறக்குமதிகள் சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது எனவே இந்த 16 உப உணவுப் பொருட்களையும் எமது வட பகுதியிலே உற்பத்தி செய்வதன் மூலம் அதனை சந்தைப்படுத்த கூடிய சந்தர்ப்பமும் தற்போதுள்ள சூழ்நிலையில் உருவாகியுள்ளது.

குறித்த பயிர்ச்செய்கையினை வடபகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் மேற்கொள்ளுமிடத்து வட பகுதியில் தன்னிறைவு உற்பத்தி நிலையினை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir