பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது:
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அல் – குவைதா அமைப்பை சேர்ந்த இருவர் மற்றும் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் அமைப்பை சேர்ந்த மூவர் என, ஐந்து பேரை பஞ்சாப் மாகாண போலீஸ் கைது செய்துள்ளது.லாகூரில் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து நவீன ரக வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.