20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தாக்கும் ‘டெல்டா’

மெக்சிகோ நாட்டில் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ‘டெல்டா’ வகை தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் மொத்தமுள்ள 12.60 கோடி மக்கள் தொகையில் ஐந்து கோடி பேர் இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுள்ளனர். 2.70 கோடி பேர் ஒரு டோஸ் போட்டுள்ளனர். அந்நாட்டில் 30 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 2.44 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. கொரோனா உயிரிழப்பு அதிகமுள்ள நாடுகளில் மெக்சிகோ நான்காவது இடத்தில் உள்ளது. மெக்சிகோவில் 20 வயதுகளில் உள்ள இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு தற்போது ஆளாகி வருகின்றனர்.

மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று மீளக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிக வீரியம் உடைய ‘டெல்டா’ வகை தொற்றால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசு தயங்குவதாலும், தனிமனித இடைவெளி, மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்காததாலும், தொற்று அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir