75 ஆவது இந்திய சுதந்திர தின உத்தியோகபூர்வ நிகழ்வுகள் புதுடெல்லி செங்கோட்டையில் நிறைவடைந்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் முக்கிய உரை இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் நிகழ்த்தப்பட்டது.
தமது உரையில் இந்தியாவினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்த விவரங்களை அவர் வெளியிட்டார்.
100 கோடி செலவில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு திட்டம் குறித்து தெரிவித்த அவர், இதன் மூலம் உற்பத்தியாளர்கள் பல்வேறு நன்மைகளை பெறவுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், பெருமளவிலான வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்காக பெரும்பங்களித்த தலைவர்களுக்கு தமது நன்றியை வெளிப்படுத்தினார்.
அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாதனை படைத்த இந்திய வீர வீராங்கனைகளுக்கு தமது பாராட்டை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைகளுக்காக இதுவரை 54 கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வு நடைபெற்ற செங்கோட்டை பகுதி உட்பட பல பிரதேசங்களில் பாதுகாப்பு உச்ச நிலையில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.