‘மாடல்’ அழகி கௌரவ கொலை பொலிஸாரிடம் சிக்கிய சகோதரன்

பாகிஸ்தானில் குடும்ப கௌரவத்திற்காக ‘மாடல்’ அழகியை கொலை செய்த வழக்கில் அவரது உடன்பிறவா சகோதரனை பொலிஸார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல ‘மாடல்’ அழகி நயாப் நதீம், 29, லாகூரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். துபாய் சென்று திரும்பிய நிலையில், கடந்த மாதம் வீட்டில் பிணமாக கிடந்தார். பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையானது தெரியவந்தது.பொலிஸாரின் தீவிர விசாரணையில் மாடல் அழகி கொலையில் அவரது உடன்பிறவா சகோதரர் முகமது அஸ்லம் சிக்கினார். அவரை கைது செய்த பொலிஸார் கூறியதாவது: மாடல் அழகியான நயாப் நதீம், பல ஆண்களுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இது குடும்ப கௌரவத்தை கெடுப்பதாக நினைத்த முகமது அஸ்லம், அவரை கொன்றுள்ளார்.பாலியல் பலாத்கார கொலை என அனைவரும் கருத வேண்டும் என்பதற்காக, அவரை நிர்வாணமாக்கிவிட்டு தப்பியுள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir