மத்திய கிழக்கு நாடுகளில் 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 350 இற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதிகமான நோயாளிகள் ஐக்கிய அரபு எமிரகத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 200 இற்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கட்டாரில் 35 பேரும், சவூதி அரேபியாவில் 12 பேரும், ஏனையவர்கள் ஏனைய நாடுகளிலும் பதிவாகியுள்ளனர்.

இதனைவிடவும் அதிகமான இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனவும், பலர் தகவல் வழங்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir