அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பிலிருந்து தன்னை காத்துக் கொள்ள, மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்துவதாக கூறியிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி இதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைட்ராக்சி குளோரோகுயின், கொவிட்-19 தொற்றால் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் தொற்றுக்கான பல சாத்தியமான சிகிச்சைகளை பரிசோதிக்க பல நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் நோயாளிகளின் ஒற்றுமை சோதனை நடத்திவருகிறது. தற்போது அந்த மருந்தைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கையாக சோதனைகளை நிறுத்தியது.
நிறைவேற்று குழு ஒற்றுமை சோதனைக்குள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தற்காலிக இடைநிறுத்தத்தை செயல்படுத்தியுள்ளது, அதே நேரத்தில் பாதுகாப்பு புள்ளி விபரங்களை தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் மதிப்பாய்வு செய்கிறது.
இரண்டு மருந்துகளும் தன்னுடல் தாக்க நோய்கள் அல்லது மலேரியா நோயாளிகளுக்கு பயன்படுத்த பொதுவாக பாதுகாப்பானவை’ என கூறினார்.
லான்சட் மருத்துவ ஆய்விதழ் கடந்த வெள்ளிகிழமை வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு எந்த மருந்தும் பயனளிக்கவில்லை என்று லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் 96,000 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் இது தெரியவந்துள்ளது.